இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மறுப்பு அறிக்கை

Date:

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மறுப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனுசரணை வருமானம் மற்றும் ஏனைய நிதிகளை அமெரிக்க டொலர்களில் பெறுகிறது.

நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்தி அமெரிக்க டொலர் கணக்குகளில் பணம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றாட நடவடிக்கைகளை பராமரிக்க நாட்டிலுள்ள இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் பங்குதாரர்களுக்கு பணம் செலுத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது.

அதற்கு தேவையான டொலர்கள் அமெரிக்க டொலர்கள் கணக்குகளில் இருந்து இலங்கை ரூபாயில் உள்ள கணக்குகளுக்கு மாற்றப்படும்.

எனவே, “ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து பணத்தை வௌியில் எடுக்கப் பார்க்கிறார்கள்…” என்று கூறுவது தவறான தகவல் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...