Wednesday, November 13, 2024

Latest Posts

எரிபொருள் விலை சூத்திரம் – பொய்யுரைக்கும் அரசு ; கஞ்சன கண்டனம்

கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொண்ட விலை சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டு்ம் என பதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் எரிபொருள் தொடர்பில் விலை தீர்மானிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.

தலைவரின் இந்த கூற்று கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

இந்த கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை தீர்மானிக்கப்படுவது, ஏனைய நிறுவனங்களின் இலாபம், உற்பத்தி செலவின் அடிப்படையில் அல்ல. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சுயாதீன நிறுவனமாகவே செயற்பட்டு வருகிறது.

கடந்த 18 மாதங்களாக எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயற்படுவதே இவர்களின் கடமை. கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர்கள் எரிபொருள் விலை தீர்மானிப்பது தொடர்பில் நாட்டுக்கு பிழையான கருத்தை தெரிவித்து, வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்துக்கு செல்வற்கு முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அதனால் நாட்டுக்கு ஒரு விடயத்தை தெரிவிக்கும் போது ஒப்பந்தங்களை சரியானமுறையில் வாசித்து பார்க்க வேண்டும்.

அதுதொடர்பான புரிதல் இல்லை என்றால் எமக்கு தெளிவுபடுத்த முடியும். இந்த துறையில் போதுமான அனுபவம் இல்லாமையே இவ்வாறான தவறான கருத்துக்களை இவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விலை தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கலாம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்வதா நிராகரிப்பதா என தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் வேறு நிறுவனங்களின் இலாப நட்டத்தின் அடிப்படையில் விலை நிர்ணயித்ததில்லை.

கடந்த இரண்டு மாதங்களில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் அது விலை சூத்திரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கிறார்.

ஆனால் விலை சூத்திரத்தின் பிரகாரமே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிக்கிறார். இருந்தாலும் விலை சூத்திரத்தை அரசாங்கம் மறைத்துள்ளது.

அதனால் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொண்ட விலை சூத்திரத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.