மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்திருந்த தீரை்மானத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் உரிமத்தை வெளிநாடுகளுக்கு வழங்க சமகால அரசாங்கம் தயாரில்லை என்பதால் இத்திட்டத்தை கைவிடப்பட உள்ளதாகவும் அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் ( India’s Shaurya Aeronautics Pvt Ltd and Russia’s Airports of Regions) கூட்டாக உருவாக்க திட்டமிட்டிருந்த செயல் திட்டத்துக்கமைய விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைக்க கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் வரைவு அனுமதிக்காக சட்டமா அதிபருக்கும் அனுப்பப்பட்டது. என்றாலும், சட்ட சிக்கல்கள் காரணமாக இந்த விடயம் ஒத்திவைக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இத்திட்டத்தை வெளிநாடுகளுக்கு கையளிக்கும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்க உள்ளதுடன், மாற்று திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான மாற்று மாதிரியை புதிய அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் தெரியவருகிறது.