Tuesday, May 21, 2024

Latest Posts

நடுக்கடலில் கைதான தமிழர்கள் குறித்து ஜனாதிபதி ரணிலிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை – வீடியோ

நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனிதாபிமான ரீதியில் தலையிட்டு அவர்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் விசேட உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட தகவல் இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் , படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மியன்மார் (பர்மா) நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட கப்பல் கடந்த 6 ஆம் திகதி தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டுள்ளது.

கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்த நிலையில் தகவவலறிந்து சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ (Helios Leader) என்ற சரக்குக் கப்பல் உடனடியாக இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டு 40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.