இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிரை மாய்த்துக் கொள்வோம் – மிரட்டும் தமிழர்கள் – சிறப்பு வீடியோ இணைப்பு

0
200

தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலை காணப்படுவதால் நாட்டை விட்டு தப்பி வந்துள்ளதாகவும் அதனால் ஐக்கிய நாடுகள் சபை தங்களை பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

303 இலங்கை தமிழர்களும் தற்போது வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தகவல் சேகரிப்பு இடம்பெறுகிறது.

அங்கு முகாமில் இருந்தபடி இலங்கை தமிழ் பெண் ஒருவரும் முதியவர் ஒருவர் அழுகுரலில் கைகூப்பி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here