கிளிநொச்சி மேல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Date:

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஒன்பது வருடங்களின் பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பானது கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மரண தண்டனை தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி மாத்தறை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை வெட்டிப் படுகொலை செய்து கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் விடுதியில் இருந்து மோப்ப நாயின் உதவியுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு,

பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு இன்றைய தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்படதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு, அதன் பின்னர், தீர்ப்பின் கீழ் கையொப்பமிட்டு, பேனையை நீதிபதி உடைத்து வீசினார்.

இதன்போது நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...