இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா கங்கொடகம பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தபகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
மேலும், கிரில்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபடயாய பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.