பிரபல பெயிண்ட் வியாபாரம் ஒன்றின் உரிமையாளரின் மகளின் திருமண நிகழ்வு நேற்று கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த நாட்டின் அரசியல் துறையில் உள்ள பலம் வாய்ந்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரவு 7 மணியளவில் இந்த வைபவத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
அவர் வந்தவுடன் ராஜித எங்கே? என்று கேட்டுள்ளார். ராஜித சேனாரத்ன அங்கு வரவில்லை என்பதை அறிந்த மகிந்த ராஜபக்ச அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார்.
“ராஜிதா, நீங்கள் இப்போது அரசாங்கத்திற்கு வரப்போவதாக ஒரு கதை இருக்கிறது, இல்லையா? வாருங்கள் விரைவில் அரசாங்கத்திடம் வாருங்கள், இதைச் செய்ய ஒன்றுபடுங்கள். இங்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது” என்று ராஜித சேனாரத்னவிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
அதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன, “அப்படி சொல்ல முடியாது. என்னிடம் கொள்கைகள் உள்ளன. அவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பேன். என்று பதில் அளித்தார்.
“ஜோன்ஸ்டன்கள், மஹிந்தானந்தாக்கள், ரோஹிதக்கள் பற்றி உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது, இல்லையா? அதை பிரச்சனையாக்க வேண்டாம். நானும் ரணிலிடம் சொன்னேன், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று கடிதம் மட்டும் கொடுக்க வேண்டும். அதுவே தீரும். நீங்கள் வாருங்கள். வந்து இதை செய்யுங்கள்…” என்று கேட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன அதற்கெல்லாம் செவிசாய்த்துக் கொண்டு பதில் சொல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.