வரவு செலவு திட்டம் இன்று

Date:

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பவுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை வரையிலும் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 19 நாட்கள் தொடர்ச்சியாக விவாதம் நடைபெறும். டிசெம்பர் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...