2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு- செலவு திட்ட உரையில் கூறினார்.
நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த முறைப்படி இந்நாட்டு மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நகர்ப்புற வீடுகளுக்கு வாடகை பெறுவது நிறுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அந்த வீடுகளின் உரிமை குடியிருப்போருக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.