வரவு செலவுத் திட்டம், யாருக்கு சொர்க்கம்? யாருக்கு நரகம்? – சஜித் விளக்கம்

Date:

ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு சொர்க்கலோகத்தையும், மக்களுக்கு நரகலோகத்தையும் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததாகவும், புத்த பகவான் கூட பிரார்த்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று போதித்ததாகவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்யாமல் கீழ் மட்டப் பிரிவினரின் ஆணையைப் பெற்றுள்ளதாகவும், ஐ.எம்.எப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், இரண்டாவது ஐ. எம். எப். கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், ஏனோ தானோ அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள் சொர்க்கபுரியில் உள்ளனர் என்றும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றி பேசும் முன், 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாத உள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று (13) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கும் வரவு செலவுத் திட்டம் மூலம் சவால் விடப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்க்கைச் செலவை 7000 இலிருந்து 17000 ஆக அதிகரிப்பதற்கான முன்மொழிவு வரவு செலவுத் திட்ட பிரேரணையில் இருந்த போதிலும், அது 7500 முதல் 10000 வரை இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவு செலவுத் திட்ட உரையின் சில அம்சங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது எனவும், இது நாட்டு மக்களை ஏமாற்றும் ஊடக நிகழ்ச்சி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட உரையின் மூலம் பௌத்தம் அவமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப நேரத்தில் உரையாற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்படி ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் நாட்டு மக்களுக்கு நரகத்தையும் இந்த வரவுசெலவு திட்டம் காட்டியுள்ளதாவும், ஏப்ரல் மாதம் வரை அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதால் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், போலி வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்து பௌத்தத்தை கேவலப்படுத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

அஸ்வெசும அறிவியலற்ற வேலைத்திட்டம் எனவும், இது ஒரு அரசியல் சூது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். தனது உரையின் மூலம் இந்த வரவு செலவுத் திட்ட உரைக்கு தெளிவான மாற்று வழிகளை முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....

யூரியா உரத்தின் கையிருப்பு குறைவு

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா...