இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 11 பேருக்கு2 வருடங்கள் சிறைத்தண்டனை

Date:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 இந்திய மீனவர்களில் 11 பேருக்கே 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டபோதும் 10 மீனவர்கள் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டிய குற்றத்துக்காகவும், படகு உரிமையாளர் ஒருவருமாகவே 11 பேருக்கும் 2 வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நால்வரும் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டணையுடன் விடுவிக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...