யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
காணி விடுவிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதோடு, தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றும் இந்த முயற்சியை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் பல முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எல்லை மறுசீரமைப்புகளை இறுதி செய்தல், இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்தல், விடுவிக்கப்பட வேண்டிய காணித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாக இடையூறுகளை நீக்குதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

