சவூதி வர்த்தகப் பிரதிநிதிகள் வெளிநாட்டு அமைச்சர் சப்ரியுடன் சந்திப்பு

Date:

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அஜ்லான் குழுமத்தின் துணைத் தலைவரும், சவூதி அரேபியாவிலுள்ள சவூதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியை 2022 நவம்பர் 13ஆந் திகதியாகிய நேற்றைய தினம் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார மீள்தன்மை மற்றும் துறைமுக நகரத்திலும் மற்றும் விருந்தோம்பல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளிலும் காணப்படுகின்ற சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அமைச்சர் சப்ரி அவருக்கு விளக்கினார்.

ஷேக் மொஹமட் இலங்கையில் நம்பிக்கைக்குரிய துறைகளில் முதலீடு செய்வதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவையும் கோரினார். சவூதி அரேபியாவில் உள்ள சிறந்த மனை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அஜ்லான் குழுமம், குடியிருப்பு, தொழில்துறை, வணிகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு இடங்களை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

இந் நிறுவனம் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சவூதி தூதுக்குழுவில் அஜ்லான் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...