வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் யானையை கொன்று, அதன் தலையை வெட்டி வீசி எரிந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
யானையின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசியுள்ளதுடன், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸிலும் எந்தவொரு முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.