Sunday, May 19, 2024

Latest Posts

2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எதிர்பார்ப்பு; செஹான் சேமசிங்க

2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

நூற்றுக்கு, நூற்றி இருபத்தி எட்டாக இருந்த கடன் சுமையை, நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்தாகக் குறைத்தல் மற்றும் 34.6 % நிதித் தேவையை 13 % வரை குறைத்தல், வெளிநாட்டு கடன் நிதியை (foreign debt financing) இன்று நிலவும் 9.4% இல் இருந்து 4.5% வரை குறைத்தல் போன்ற 03 காரணங்களின் அடிப்படையிலேயே 2023 மற்றும் 2024 வரவு செலவுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கங்களை அடைந்துகொள்ளவே, சவால் மிக்க இக்காலப்பகுதியில் நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றோம்.

மேலும், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடியின்போது, அவதானம் செலுத்தப்பட வேண்டிய மற்றும் கடந்த காலங்களில் அனைவரும் கருத்துத் தெரிவித்த அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி, அவர்களை மீண்டும் கட்டியெழுப்ப அவசியமான பொருளாதார உந்துதலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இதன்போது, எமது கடன் மறுசீரமைப்பு மிக முக்கியமாகும். கடன் மறுசீரமைப்பு இன்றி கடன் நிலைபேற்றுத் தன்மையை இந்நாட்டில் ஏற்படுத்த முடியாது. நாம் அதனை நோக்கிப் பயணிக்க உள்நாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்தோம். அதன் பின்னர் வெளிநாட்டு இருதரப்பு கடன் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக எமக்கு சர்வதேச கடன் வழங்குனர்கள் ஆதரவு வழங்கி வருகின்றார்கள்.

இந்த வருட இறுதிக்குள் எமது கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து, நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, எமக்கு மீண்டும் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை தொடரக் கூடிய சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்காக வெற்றிகரமான பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக, இந்த நடவடிக்கைகளின் மூலம் 2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக மேற்கொள்ள ஆரம்பிக்கும் வருடமாக, 2024 ஆம் ஆண்டு அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.”என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.