உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் திகதி சஜித் பிரேமதாஸவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்களை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்குள் புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஆரம்பிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதற்கான சட்ட ஏற்பாடுகள் தமது ஆணைக்குழுவிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிப் பிரிவுகளின் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 20ஆம் திகதி நடத்த முடியாது என பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, உள்ளுராட்சி பிரதேச எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 341 ஆகும்.

கூட்டு கடிதம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான 16 எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்கள் நேற்று (15) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி கூட்டுக் கடிதம் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா கூட்டமைப்பு, சுதந்திர ஜனதா சபை, இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேர்தல் நடைபெறும் நேரம் தொடர்பில் தமக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...