உலகக் கிண்ண போட்டி பார்க்க நண்பர்கள், குடும்பத்தினருடன் சென்ற ஷம்மி

Date:

2022ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருப்பது உலகக் கிண்ணப் போட்டியைக் காண, குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரை அழைத்துச் சென்றதை இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

கோப் குழு முன்பாக இலங்கை கிரிக்கெட் சபை அழைக்கப்பட்டபோது கேள்விகளுக்கு பதிலளித்த ஷம்மி சில்வா, கடந்த ஆண்டு அவுரேலியாவில் நடைபெற்ற போட்டியை காண குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினர் கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்றைய தினம் கோப் குழுவில் ஏற்கனவே முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...