மொட்டு கட்சியின் ஊடக சந்திப்புகள் இரு வாரத்திற்கு இரத்து

0
130

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தினசரி ஊடகவியலாளர் மாநாட்டை சுமார் இரண்டு வாரங்களுக்கு நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார திவால்நிலைக்கு ராஜபக்ச உள்ளிட்ட அதிகாரவர்க்க குழுவே காரணம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அக்கட்சி பெரும் சிக்கலில் உள்ளதாகவும், ஊடகங்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் போனமையே மேற்படி தீர்மானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே நிலைமை ஓரளவுக்கு அமைதியடையும் வரை நெலும் மாவத்தை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் தினசரி ஊடகவியலாளர் சந்திப்பை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here