2023 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி

Date:

நேற்று இடம்பெற்ற உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

தென்ஆப்பிரிக்க அணி சார்பில் David Miller 101 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Mitchell Starc மற்றும் Pat Cummins தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் Travis Head அதிகபட்சமாக 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோல், David Warner 29 ஓட்டங்களையும், Steven Smith 30 ஓட்டங்களையும் Josh Inglis 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Tabraiz Shamsi மற்றும் Gerald Coetzee ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக Travis Head தெரிவு செய்யப்பட்டார்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (19) இடம்பெறவுள்ள 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...