எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் – ரொஷான் ரணசிங்க

0
103

தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனது பாதுகாப்பு குறித்து ஆராயுமாறும் சபாநாயகரிடம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய அவர், ஷம்மி சில்வா உள்ளிட்டவர்கள் அண்மையில் செய்தியாளர் சந்திப்பின் போது தமக்கு எதிராக அச்சுறுத்தும்விதத்தில் பேசியிருந்தாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தனது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் சபாநாயகரரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here