அடுத்த தேர்தல், கட்சி தலைமை குறித்து மஹிந்த வெளியிட்ட கருத்து

0
186

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்று (17) சிறப்பு நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையில் 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களும் 5000 ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் மகிந்த ராஜபக்சவையும் கர்ப்பிணி தாய்மார்களையும் மகா சங்கத்தினர் ஆசீர்வதித்தனர்.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வழிபாடுகள் முடிந்து வெளியில் வந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் சில கேள்விகளை கேட்டதுடன், அது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் வேறு யாரோ ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டிற்கு தான் அழைக்கப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் – அடுத்து வருவது பொதுத் தேர்தலா? ஜனாதிபதி தேர்தலா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – “அது எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் வெற்றி பெறுவோம்” என்றார்.

ஊடகவியலாளர்கள் – நீங்கள் இப்போது எப்படி தயாராக இருக்கிறீர்கள்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – “நன்றாக தயார்.”

ஊடகவியலாளர்கள் – மொட்டு புதிய கட்சி தலைவரை நியமிக்குமா? நீங்கள் எங்களுக்கு ஒரு குறிப்பு கொடுக்க முடியுமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – “பார்ப்போம். சொன்னால் அது வெளிவந்து விடும்.

ஊடகவியலாளர்கள் – “நீங்கள் இருந்த போது பட்ஜெட்டில் வழங்கப்பட்டது போல எதுவும் இல்லையே.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – ” எங்களை வேண்டாம் என்றனர். இப்போது ஒரு புதிய குழு வந்துள்ளது, பார்ப்போம்” என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here