கடன் பெற்றோருக்கு மத்திய வங்கி சலுகை

0
167

கடந்த மாதம் பொது மற்றும் உணவுப் பணவீக்கத்தின் சதவீதக் குறைப்புடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 4% முதல் 5% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழு முன்னிலையில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மாறுபட்ட வட்டி வீதத்தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டமையினால் அசெளகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையில், மத்திய வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here