பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு அணி ஏற்பாட்டாளர் ஸ்ரீதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசார் கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அங்கு பொலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகி பதற்றம் நிலவுகிறது.
இந்த பதற்றத்தை அடுத்து கொழும்பு பௌத்தாலோக மாவட்ட வீதியை முழுமையாக மூடி வைக்க பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






























