ரவி களத்தில்.. தேசிய பட்டியல் நிரப்பி அதிரடி!

0
181

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 18) காலை புதிய ஜனநாயக முன்னணியின் (காஸ் சிலிண்டர்) செயலாளர் திருமதி ஷியாமலா பெரேராவுக்கு அழைப்பு விடுத்து இருவரின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்ப முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதனை ஷியாமலா பெரேரா மறுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனை கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் திரு.ரவி கருணாநாயக்க கேட்டறிந்து, அவர் உடனடியாகச் சென்று ஷியாமலா பெரேராவைச் சந்தித்து ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறும், அதன்படி தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்க பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செயலாளர் நாயகம் கடிதம் அனுப்பியுள்ளார்.

மற்றைய எம்.பி.யாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு சட்டப்பூர்வ கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ரவி கருணாநாயக்கவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து ரணில் விக்கிரமசிங்க கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here