Tuesday, November 19, 2024

Latest Posts

அநுர அரசை வாழ்த்துகின்றேன் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல்போனதால் மனம் வருந்துகின்றேன்

“நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்.”

  • இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாது:-

“நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று இருந்த ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது. இதையிட்டு நான் மன வருத்தம் அடைகின்றேன்.

எனினும், கொழும்பு தலைநகர் மாவட்டத்தில் இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களைத் தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாகவும் அதிகரித்துக் கொண்ட, சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் உடன் பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

அடித்துள்ள அரசியல் அலையின் மத்தியிலும் நாடெங்கும் மக்கள், எமது வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 123 விருப்பு வாக்குகளை எமது வாக்காளர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு விசேட நன்றிகள்.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக உரிமை செயற்பாடுகளாகும். ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்தியப்படவில்லை. இதைக் கண்டு மன வருத்தம் அடைகின்றேன்.

2010 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பெற ஒரு கட்சித் தலைவராக மேற்கொண்ட முயற்சியின்போது, இத்தகைய ஒரு வெற்றி அடையாத சூழலை நான் எதிர்கொண்டேன். பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு. ஆனால், அப்படிப் போராடி பெற்ற கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவமும் இன்று இல்லாமல் போயுள்ளது. அதையிட்டும் நான் கவலை அடைகின்றேன்.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக கொழும்பு மாவட்ட புதிய வேட்பாளர் தம்பி லோஷன் புதிய அனுபவங்கள் பலவற்றைக் கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள். அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கடும் அரசியல் அலையின் மத்தியில், தமிழ் வாக்காளர் சிறுபான்மையாக வாழும் ஏனைய இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்.” – என்றுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.