ஹெரோயின் விற்பனை செய்த மொட்டுக் கட்சி உறுப்பினர் கைது

0
213

உக்குவெல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் 2600 மில்லிகிராம் ஹெரோயினும், ஏனைய பெண் சந்தேகநபர்களிடம் இருந்து 2500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய மொட்டு உறுப்பினர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதுடன் அவருக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக வழக்கும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் மாத்தளை – களுதேவல – நரிகந்த பிரதேசத்தில் மறைந்திருந்து இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here