அதிகாலையில் படகு கவிழ்ந்து ஜப்பானியர் உள்ளிட்ட நால்வர் மாயம்

0
172
File Photo
File Photo

மாரவில, கடல் கட்டுவ பகுதியில் இன்று (19) காலை படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (18) மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

பின்னர், குறித்த குழுவினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மழை காரணமாக படகு கடலில் கவிழ்ந்ததாகவும், காணாமல் போனதாக கூறப்படும் மாரவில – வடக்கு மூடுகடுவ பகுதியைச் சேர்ந்த படகின் உரிமையாளரான ஸ்ரீஆனி ஜீவனி பெர்னாண்டோ இன்று ( 19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து படகை ஓட்டிச் சென்றவர்கள் காணியில் இருந்த மற்றுமொரு மீனவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாகவும், படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

படகில் இருந்த ஏனைய நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாரவில பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here