முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம்

Date:

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க்  காங்கிரஸ் கட்சியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் சென்ற கஜேந்திரகுமார் அங்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதன்போது நினைவுத் தூபியில் பொதுச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து தனது கடமைகளை அவர் ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....