மருத்துவ வழங்கல் பிரிவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கைது

0
158

மருத்துவ வழங்கல் பிரிவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை வாங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் பங்கு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here