தேசிய பட்டியல் உறுப்பினர் – ரணில் தலைமையில் விசாரணைக்குழு

0
205

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த குழுவின் உறுப்பினர்களாக, சட்டத்தரணி குமார் துனுசிங்க, சட்டத்தரணி இந்திக்க வேரகொட, கலாநிதி விதானகே
குழுவின் செயலாளர் – சட்டத்தரணி யசஸ் டி சில்வா

மேற்படி ஆய்வுக் குழுவின் அறிக்கையை 3 வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அறிக்கையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here