Sunday, November 24, 2024

Latest Posts

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

29 பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விபரம் வருமர்று,

01.பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

02.நாமல் கருணாரத்ன – விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்

03.வசந்த பியதிஸ்ஸ – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

04.நலின் ஹெவகே – தொழிற்கல்வி பிரதி அமைச்சர்

05.ஆர். எம். ஜயவர்தன – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

06.கமகெதர திசாநாயக்க – புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்

07.டி.பீ.சரத் – வீடமைப்பு பிரதி அமைச்சர்

08.ரத்ன கமகே – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்

09.மஹிந்த ஜயசிங்க – தொழில் பிரதி அமைச்சர்

10.அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

11.அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

12.அண்டன் ஜெயக்கொடி – சுற்றாடல் பிரதி அமைச்சர்

13.மொஹமட் முனீர் – தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்

14.பொறியியலாளர் எரங்க வீரரத்ன – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

15.எரங்க குணசேகர – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

16.சதுரங்க அபேசிங்க – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

17.பொறியியலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

18.நாமல் சுதர்சன – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்

19.ருவன் செனரத் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்

20.கலாநிதி பிரசன்ன குமார குணசேன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

21.டொக்டர் ஹன்சக விஜேமுனி – சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்

22.உபாலி சமரசிங்க – கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

23.ருவன் சமிந்த ரணசிங்க – சுற்றுலா பிரதி அமைச்சர்

24.சுகத் திலகரத்ன – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

25.சுந்தரலிங்கம் பிரதீப் – பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்

26.சட்டத்தரணி சுனில் வட்டகல – பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர்

27.கலாநிதி மதுர செனவிரத்ன – கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்

28.கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

29.கலாநிதி சுசில் ரணசிங்க – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது கலந்து கொண்டிருந்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.