இலங்கை கிரிக்கெட் குறித்து ஐசிசி எடுத்த 07 தீர்மானங்கள்

Date:

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டதை மேலும் அமுல்படுத்த பேரவை நேற்று (21) தீர்மானித்துள்ளது.

அங்கத்துவம் இரத்து செய்யப்பட்டாலும் இலங்கை கிரிக்கெட் அணி வழமை போன்று சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறாமல் தென்னாபிரிக்காவில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் அதன் கட்டுப்பாட்டை இடைநிறுத்துவதற்கு இடைக்கால கட்டுப்பாட்டு சபையொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நவம்பர் 6ஆம் திகதி நடவடிக்கை எடுத்தார்.

எவ்வாறாயினும், மறுநாளே, இடைக்கால கட்டுப்பாட்டுக் குழு மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடான இலங்கை தனது பொறுப்புகளை, குறிப்பாக அதன் விவகாரங்களை சுயாதீனமாக நிர்வகித்தல் மற்றும் அதன் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் தேவையை கடுமையாக மீறியுள்ளது.

அதன் பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜே ஷாவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் ஐசிசி தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உபகுழுவின் தலைவர் அலி சப்ரிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி பொதுச் சபையில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா பங்கேற்றார்.

ஐசிசியின் பணிப்பாளர் சபை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இரத்து செய்வதை தொடர்வதற்கு ஏகமனதாக தீர்மானித்ததாக சபை அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் உறுதியற்ற தன்மையால், 2024ல் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை தென்னாப்பிரிக்காவில் நடத்த, அகமதாபாத்தில் நடந்த ஐசிசி பொதுச்சபையில் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், சர்வதேச உறுப்புரிமை ரத்து செய்யப்பட்ட போதிலும், இலங்கை கிரிக்கெட் அணி வழமை போன்று சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் கிரிக்கட் போட்டிகளை மேற்கொள்வதற்கு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நிதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...