டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய பிடியாணை

0
152

நேற்று (நவம்பர் 21) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.

தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் 2016ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் டக்ளஸ் தேவானந்தா சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.

அவர் சுகயீனமுற்றுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையின் பின்னணியிலேயே நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here