தமிழரசு நாடாளுமன்றக் குழுவின்பேச்சாளராக ஸ்ரீநேசன் நியமனம்!

0
213

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் கூடியது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் கட்சியின் ஊடகப் பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனை சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்திருந்தமையுடன், சண்முகம் குகதாசன் வழிமொழிந்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையிடும் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை இளையதம்பி சிறிநாத் முன்மொழிய, அதனை ஞானமுத்து ஸ்ரீநேசன் வழிமொழிந்திருந்தார்.

இந்தக் கூட்டத்தின்போது, தமிழரசுக் கட்சியாக ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவது என்றும், அதற்கான வரைவுகளை முறையாகத் தயாரித்து திட்டமிட்டதும், ஆக்கபூர்வமானதுமான சந்திப்பை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here