கிருலப்பனையில் தமிழ்ப் பெண் படுகொலை!

0
185

கொழும்பு, கிருலப்பனை, கலிங்க மாவத்தை, கொலோம்தோட்டை சரசவி உயன அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கமலா சின்னம்மா என்ற 70 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார் என்றும், நேற்றுக் காலை 6.30 மணியளவில் மகள், பேத்தியைப் பாடசாலையில் இறக்கி விட்டு வேலைக்குச் சென்றார் என்றும் தெரியவந்துள்ளது.

காலை 10 மணியளவில் மொரட்டுவை பிரதேசத்துக்கு வியாபார நிமித்தம் செல்வதாகக் கூறி கணவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், கொலையுண்ட வயோதிபப் பெண் மாத்திரமே வீட்டில் தங்கியிருந்தார் என்றும் பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here