கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை!

0
164

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு கூட்டமைப்பின் (IUBF) அமைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 23) பிவணணை வழங்கியது.

அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவுடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 18 அன்று கொழும்பில் யூனியன் பிளேஸில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக IUSF ஏற்பாடு செய்த கண்டன ஊர்வலத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பல எதிர்ப்பாளர்களில் முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரும் அடங்குவர்.

முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் உள்ளிட்ட மூன்று செயற்பாட்டாளர்களை 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவை பொலிசார் முதலில் பெற்றனர். பின்னர், மூவரையும் 90 நாட்களுக்கு மேலும் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது.

தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை சட்டமா அதிபரின் உத்தரவு கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நவம்பர் 17ஆம் திகதி உத்தரவிட்டார்.

முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட உரிமைக் குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தெளிவான கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சமீபத்திய அறிக்கையில், மாணவர் தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றது” என்று கூறியதுடன், காவலில் வைக்கும் உத்தரவை நீட்டிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது. போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யக்கூடாது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here