பத்து வருடங்களின் பின்னர் தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலைதான் இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்ச்சி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எங்கள் மக்களிடத்தில் மறதி என்கின்ற பண்பு வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பழைய விடயங்களை மறக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக இன்னும் 10 ஆண்டுகளின் பின்னர் பிரபாகரன் யார் என்றுகூட கேட்கலாம்.
மாகாண சபை செயற்பாட்டில் இருந்தபோது ஐங்கரன் விவசாய அமைச்சராக இருந்தபோது இந்த கார்த்திகை மாதத்தினை மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
எனவே மாகாண சபையின் அவைத்தலைவர் என்ற ரீதியில் அந்த தீர்மானம் நிறைவேற்றியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு.
ஐங்கரநேசன் மாத்திரம் தற்பொழுது இந்த மரநடுகையை செயற் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். இது மகிழ்ச்சிக்குரிய விடயம்” என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் கூறினார்.