பூந்தொட்டியுடன் யாத்திரை சென்று கோட்டாபய ராஜபக்சவிடம் பிரதமர் பதவியை கோரவில்லை!

0
150

பூந்தொட்டியுடன் யாத்திரை சென்று கோட்டாபய ராஜபக்சவிடம் பிரதமர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என்று நான் அவருக்கு கடிதம் எழுதவில்லை.மேலும் பதவி கேட்டு நான் யாத்திரை செல்லவில்லை.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாம் எழுதிய கடிதம் தொடர்பில் நேற்று இந்த சபையில் கலந்துரையாடப்பட்டதாகவும், தனது தனிப்பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு அன்றி கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் புரிந்து கொண்டு தான் அந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி தம்மிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்போதே எழுத்து மூலமான பதிலை அனுப்பி வைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அதன்போது, ​​இடைக்கால குறுகிய கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நான்கு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாச, அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் செயற்படுவதும், நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்தி மக்களுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதும் ஆகும்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here