பண்டிகைக் காலத்தில் மக்களைக் காக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை!

0
56

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பிலான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அந்தச் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இம்மாதம் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் கே.திரு.குணவர்தன அனைத்து மாவட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவித்துள்ளதாகவும் மாவட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு 17 அம்சங்களின் இதனை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here