Thursday, November 14, 2024

Latest Posts

சாதனை பெண் அகிலத்திரு நாயகிக்கு பாராட்டு விழா

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய அகிலத்திருநாயகி 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகிலத்திருநாயகி அவர்களது சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைகள் இடம் பெற்றதுடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு வழங்கியும் பொன்னாடை மாலை அணிவித்தும் அகிலத்திருநாயகி கௌரவிக்கப்பட்டார்

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்)
எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் லிங்கேஸ்வரன் , பிரதம கணக்காளர் ம. செல்வரட்ணம், சமுர்த்தி பணிப்பாளர் M.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயபவானி , பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சண்முகலிங்கம் அகிலத்திருநாயகி அவர்களது ஆசிரியர் ஐயம்பிள்ளை என பலரும் கலந்துகொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.