வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு

Date:

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427  குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த  ஆயிரத்து 861 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம்  5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 87 குடும்பங்களைச் சேர்ந்த 324 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...