விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் சில காலம் இயங்கும் என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது.
அதன் பின்னர் எஸ்.பி.திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அறிய முடிகிறது