இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் மாவீரர் நினைவு நாள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையில், பொலிஸாரின் பல தடைகளையும் மீறி கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் மாவீரர் தின நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் உணர்வூபூர்வமாக நடைபெற்றது.
மழைக்கு மத்தியிலும் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகச்சுடர் ஏற்ற ஏனையவர்கள் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியில் மக்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்போது அஞ்சலி செலுத்தும் இடத்திற்குள் சப்பாத்துக் கால்களுடன் பொலிஸார் நுழைந்து, நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நினைவேந்தல் பகுதிக்கு பொலிஸார் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்ததை தொடர்ந்து அங்கிருந்த மததத்தலைவர்கள், மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அங்கு ஒருவித பதற்றம் நிலவியது.