வேளாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் கே.பி. குணரத்ன, சட்டவிரோதமான முறையில் விவசாயிகள் பெற்றுக்கொண்ட தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் எதிர்வரும் “பெரும்போகம்” வெற்றியடையாமல் போகும் அபாயம் இருப்பதாக கூறுகிறார்.
ஏற்கனவே கந்தளேயில் சுமார் 54 ஏக்கர் விவசாய நிலங்கள் தரம் குறைந்த பூச்சிக்கொல்லி பாவனையினால் அழிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், இந்த தரமற்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தினால் “பெரும்போகம்” அறுவடை சுமார் 10% வரை குறையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்தார்.
N.S