பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

0
217

பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் மாவீரர்கள் மற்றும் யுத்தத்தில் உயிர்த்தவர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு கடந்த ஏழுநாட்களாக இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச நாடுகளிலும் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வந்தன.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பெருந்திரளான தமிழ் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here