நாட்டின் சுகாதார நிலை அச்சத்தில், வைத்தியசாலைகள் பூட்டு

0
66
Cropped shot of an unrecognizable doctor holding a stethoscope

நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல், சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருதல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த விசேட குழுவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வட மாகாணம் மற்றும் புத்தளம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் வைத்தியர்கள் இன்மையால் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வைத்தியர்கள் வௌிநாடு செல்கின்றமை, ஓய்வு பெறுகின்றமை, இடமாற்றம் பெறுகின்றமை, சேவையை விட்டு விலகுதல் உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here