Saturday, September 14, 2024

Latest Posts

அகிலத்திருநாயகிக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று (29) யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது.

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரப்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக வைத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உத்தியோகத்தரால் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து மாவட்ட செயலகத்தின் முன்பாக இருந்து வாகன பேரணியில் சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைத்து அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

1,500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5,000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 800m ஓட்டபோட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

72 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.