புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும்

0
138

இலங்கையில் கல்வி கற்கும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது விடை காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் அறுபது இலட்சம் செலவழிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தாம் இலங்கையில் தங்கியிருப்பதற்காகவும் அவ்வாறே செலவு செய்வதாகவும் தெரிவித்தார்.

பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழுக்களை பார்க்கும் போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட நாம் அந்த நாடுகளுக்கு செய்யும் உதவிகளே அதிகம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த பிரச்சினை அரசாங்கம் எவ்வாறானதாக இருந்தாலும் அதனை பாதிக்கிறது எனவும் இந்த பிரச்சினைக்கான பதிலை நாம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here