லிட்ரோ கேஸ் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

0
210

இன்று (01) முதல் ஒரு இலட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த சில நாட்களாக சந்தைக்கு எரிவாயுவை விடுவிப்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது எரிவாயு இருப்புக்கள் உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

இன்று காலை சந்தையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்களை வெளியிடுகிறோம். மற்ற சிலிண்டர்களும் இன்று சந்தையில் வெளியிடப்படுகின்றன. தற்போது, ​​வந்த கப்பலில் எரிவாயு சரக்குகளை இறக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 117,000 சிலிண்டர்கள் இன்று வெளியிடப்படுகின்றன. இது தொடரும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here